ஆப்கானிஸ்தானில் யுஎஸ் தூதரகம், நேடோ தலைமையகம் மீது தலிபான்கள் பயங்கர தாக்குதல்

அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏவின் அலுவலகம், சில ஐரோப்பிய நாடுகளின் தூதரக கட்டடங்கள், ஆப்கானிஸ்தான் ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தினர்.
ஏராளமான தலிபான் தற்கொலைப் படையினர் உடலில் வெடிகுண்டுகளுடன் இந்தக் கட்டடங்களில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து வந்த தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், வாகனங்களின் வெடிகுண்டுகளை ஏற்றி வந்தும் தாக்குதல் நடத்தினர்.
பகல் 1 மணியளலில் ஆரம்பித்த இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. பல்வேறு கட்டடங்களின் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் 5 பள்ளி குழந்தைகள் சுட்டுக் கொலை:
இந் நிலையில் பாகிஸ்தானில் மர்ம நபர் ஒருவர் பள்ளி வேன் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில், 5 பள்ளிக் குழந்தைகள் பலியாகினர்.
பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில், முட்டானி என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளி முடிந்து, வேனில் குழந்தை வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, வழியில் பள்ளி வேனை மறித்த, அடையாள தெரியாத மர்ம நபர் ஒருவர், வேன் மீது சரமாரியாக சுட்டார்.
இதில் 5 குழந்தைகள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காயமடைந்தவர்களில் 5 குழந்தைகள் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
துப்பாக்கி சூடு நடத்திய மர்மக் கும்பல் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு அதே பகுதியில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications