பாகிஸ்தானில் தொடார் மழையினால் வெள்ளம்: 200 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்தில் கடந்த மாதங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டதாக தெரிகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருக்கலாம் என தெரிகிறது. பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே தலீபான் தீவிரவாதிகளின் தாக்குதல், எல்லா துறைகளிலும் ஊழல், அதிகநேர மின்தடை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இடையே வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள அபாயங்களால் பாகிஸ்தான் ஆளுங்கட்சி செய்வது அறியாமல் திகைத்து வருகிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது, சிந்து மாநிலத்தில் ஏற்கனவே மோசமாக காலநிலை நிலவுகிறது. இந்நிலையில் தற்போது அங்கு வெள்ளமும் ஏற்பட்டு நிலைமையை இன்னும் பரிதாபகரமாக மாற்றி உள்ளது, என்றனர்.
இதுகுறித்து செஞ்சிலுவை சங்கத்தினர் கூறியதாவது, சில மாதங்களாக பாகிஸ்தானின் சில பகுதிகளில் மழைப் பெய்து வருவதால் அங்கு சுகாதார குறைபாடு ஏற்பட்டுள்ளதால் தொற்று நோய்கள் பரவும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்குவதற்கு நிலையான வீடு மற்றும் சரியான உணவின்றி பல மாதங்கள் தவித்தனர். இந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 20 லட்சம் பஞ்சு மூட்டைகள் வீணாகி உள்ளது.
மேலும் நாட்டின் 13 சதவீத உணவுப் பொருட்கள் வீணாகி உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மழைநீர் விரைவாக வடிந்து செல்வதற்கு சரியான வாய்க்கால் வசதிகள் இல்லாததால் கடலுக்கு செல்லும் வெள்ள அளவு குறைவாக உள்ளது என, அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications