பரமக்குடி சம்பவம்: பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்துப் பேச சபாநாயகர் ஜெயக்குமார் அனுமதி மறுத்ததால் சட்டசபையில் இன்று அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாமக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

சட்டசபையில் இன்று காலை பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை இடதுசாரி உறுப்பினர்களும், பாமகவினரும் எழுப்பினர். காவல்துறை அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

இருப்பினும் இந்த விவகாரம் குறித்துப் பேச சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதையடுத்து இடதுசாரி உறுப்பினர்களும், பாமக உறுப்பினர்களும் அடுத்தடுத்து வெளிநடப்புச் செய்வதாக கூறி வெளியேறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+