பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்- ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் விசாரிப்பார்
சென்னை: பரமக்குடி வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத் விசாரணை நடத்துவார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பரமக்குடி சம்பவம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த நிலையில் கமிஷன் குறித்த விவரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் இந்த விசாரணைக் கமிஷனுக்கு தலைவராக இருந்து விசாரணை நடத்துவார். 2 மாதத்தில் அவர் விசாரணையை முடித்து அரசிடம் பரிந்துரை அறிக்கையை அளிப்பார்.அதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடியில், தியாகி இம்மானுவேல் சேகரன் குரு பூஜைக்காக கிளம்பிய தலித் தலைவர் ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பரமக்குடி, பார்த்திபனூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் வன்முறை மூண்டது. இதில் பரமக்குடியில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரத்தைத் தொடர்ந்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications