குண்டுவெடிப்போ என பயந்து விட்டோம்- ரயில் விபத்து குறித்து சித்தேரி மக்கள் பேட்டி

சித்தேரி ரயில் நிலையம் அருகே நேற்று இரவு நடந்த விபத்தில்10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் வாசிகள் கூறுகையில், குண்டுதான் வெடித்து விட்டதோ என முதலில் நினைத்ததாக கூறினர்.
இதுகுறித்து சிதம்பரம் என்பவர் கூறுகையில், மிகப் பெரிய சத்தம் கேட்டு ஓடி வந்தோம். ரயில் பெட்டிகள் கவிழ்ந்து கிடப்பதைப் பார்த்து வெடிகுண்டு வைத்து விட்டனரோ என்று முதலில் பயந்து போனோம். அந்த அளவுக்கு சத்தமும் பெரிதாக இருந்தது. பின்னர்தான் விபத்து என அறிந்தோம். இதையடுத்து ரயிலை நாங்கள் ரயிலை நோக்கி ஓடினோம். ஆனால் கடும் இருட்டாக இருந்ததாலும், புகைமூட்டமாக இருந்ததாலும் எங்களால் உடனடியாக யாரையும் மீட்க முடியாத நிலை இருந்தது என்றார்.
அம்பத்தூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் இந்த விபத்தில் சிக்கி காயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், பலத்த சத்தம்தான் கேட்டது.அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஒரே இருட்டாக இருந்தது, புகையும் வந்தது. குண்டுவெடிப்பு நடந்து விட்டதோ என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகுதான் விபத்து என அறிந்தேன் என்றார்.
மாதவரத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் இந்த ரயிலில் தினசரி பயணிப்பவர். அவரும் விபத்தில் சிக்கிக் காயமடைந்தார். அவர் கூறுகையில், பலத்த சத்தம் கேட்டது. அதன் பின்னர் நான் தண்டவாளத்தில் கிடந்தேன். சக பயணிகள்தான் என்னைக் காப்பாற்றி மீட்டனர் என்றார்.
விபத்தில் இறந்தவர்கள் பட்டியல்
விபத்தில் உயிரிழந்த பத்து பேரின் அடையாளமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம்:
ரகு, பரசுராமன், சேட்டு, கிரீஷ் குமார், கவிதா, ரகுநாத், சதீஷ் குமார், தலங்கை சிவலிங்கம், முனியப்பன், விநாயகம்.
10 பேரின் உடல்களும் அரக்கோணம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. பிரதேப் பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications