அசாருத்தீன் மகன் குணமடைய பிரார்த்திக்கும் யுவராஜ் சிங், சானியா மிர்சா
ஹைதராபாத்: பைக் விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன் குணமடைய யுவராஜ் சிங், சானியா மிர்சா ஆகியோர் தங்களை பிரார்த்தனையை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மொராதாபாத் எம்.பி.யுமான அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பைக் விபத்தில் படுகாயம் அடைந்தார். அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அயாஸுத்தீன் குணமடைய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஆகியோர் தங்கள் பிரார்த்தனையை டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
"அசாருத்தீன் மகனுக்கு நடந்ததை நம்பவே முடியவில்லை. என்னால் பிரார்த்தனை மட்டும் தான் செய்ய முடியும்," என்று யுவராஜ் ட்வீட் செய்துள்ளார்.
"இன்ஷா அல்லாஹ் அயாஸுத்தீன் குணமடைய துவா செய்கிறேன். அசாருத்தீன் குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறேன். மரணம் அடைந்த அசார் சகோதரியின் மகனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கட்டும். இந்த செய்தியைக் கேட்டு ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை," என்று சானியா ட்வீட் செய்துள்ளார்.
"நம் அனைவரின் பிரார்த்தனையும் அசாருத்தீனின் மகனைக் காப்பாற்றட்டும்", என்று நடிகர் பொம்மன் இரானி டுவீட் செய்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications