அல் கொய்தா தலைவர் ஜவாஹிரி பாகிஸ்தானில் தான் உள்ளார்: அமெரிக்கா தகவல்
இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி இன்னும் பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்று பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்ற பிறகு இரண்டாவது இடத்தில் இருந்த ஜவாஹிரி தலைவரானார். ஒசாமா இறந்துவிட்டாலும் அல் கொய்தா தீவிரவாதிகளைத் தேடும் பணியை அமெரி்க்கா நிறுத்திவிடவில்லை. முதலில் ஒசாமாவைத் தேடியது, தற்போது ஜவாஹிரியைத் தேடி வருகிறது.
இந்நிலையில் ஜவாஹிரி பாகிஸ்தானில் இருப்பதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
ஜாஹிரி பாகிஸ்தானைத் தவிர வேறு எங்கும் இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் வரவில்லை என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் தெரிவித்துள்ளார்.
9/11 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரி்க்கா தீவிரவாதத்திற்கு எதிரான போரைத் துவங்கி நடத்தி வருகிறது. இதனால் ஒசாமைவைப் போன்றே ஜவாஹிரியும் தலைமறைவாக உள்ளார்.
9/11 தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அல் கொய்தா ஒரு வீடியோ வெளியிட்டது. அதில் பின் லேடன் பேசியிருக்கிறார். ஜவாஹிரி அமெரிக்காவை மிரட்டி இருக்கிறார். இந்த ஆண்டு அரபிகளுக்கு வசந்தகாலம், தொடர்ந்து அமெரிக்கர்களுக்கு மந்தமான கடுங்குளிர் காலம் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவில் ஜவாஹிரியின் புகைப்படம் மட்டும் தான் காண்பிக்கப்பட்டுள்ளது. அல் கொய்தாவின் ஊடகமான அஸ்ஸஹாப் இதை வெளியிட்டது. ஜிஹாதி இணையதளத்தில் கடந்த திங்கட்கிழமை இந்த வீடியோ வெளியிடப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications