உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை: திமுக தனித்துப் போட்டி!- கருணாநிதி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி மன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், தி.மு.கவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். இது குறித்து அவரது அறிக்கை:
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதென்பது இந்திய நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்ற அக்கறையின் அடிப்படையில், தி.மு.க.வும் உறுதுணையாக நின்றோ- ஒத்துழைப்பு நல்கியோ அத்தகைய கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல், மத்தியில் ஒரு முற்போக்கு அரசை அமைத்திடவும், சட்டமன்றத்தேர்தல், மாநிலத்தில் ஒரு ஜனநாயக ஆட்சியை அமைக்கவும் பயன்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஒத்த கருத்துடைய கட்சிகளோடு ஒன்றுபட்டு கூட்டணி அமைத்து மத்தியிலும், மாநிலத்திலும், மதச்சார்புடையதும், மனித நேயத்திற்கு விரோதமானதுமான ஆட்சி அதிகாரமையங்கள் அமைந்து விடக்கூடாது என்ற அக்கறையுடன் செயல்படுகின்ற தி.மு.க., அண்மையில் வரவிருக்கின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் அரசியல் அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ முன் வைக்கப்படாமல் பொதுமக்களுக்குத் தேவையான சுகாதார வசதி, கல்வி வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி போன்ற பொதுப் பணிகளை குறிக்கோளாகக் கொண்டு - இயங்க வேண்டும் என்பதே எல்லோராலும் விரும்பப்படுகிற - ஏற்கப்படுகின்ற நிலை என்பதைக் கருத்திலே கொண்டு உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் அரசியல் நோக்கில் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்பதை ஆழ்ந்த சிந்தனைக்குப்பிறகு தி.மு.க. முடிவாக எடுத்துள்ளது.
இந்த முடிவின் அடிப்படையில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் எந்த ஒரு அணியும் அமைக்காமல், மாநில அளவிலான சட்டமன்றத் தேர்தல்; தேசிய அளவிலான நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் மட்டுமே - கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று தி.மு.க. முடிவெடுக்கின்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
காங்கிரஸ் அதிர்ச்சி:
திமுகவின் இந்த முடிவு காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக கூட்டணியில் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்று ஒரு கோஷ்டியும், தனித்துப் போட்டியிட்டு பலம் காட்ட வேண்டும் என்று இன்னொரு கோஷ்டியும் கூறிவந்த நிலையில், கருணாநிதி தடாலடியாக இப்படி அறிவித்திருப்பது அவர்களை திண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சட்ட மன்றத் தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சிக்கு, இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மரண அடி கிடைப்பது, கருணாநிதியின் அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளது.
காங்கிரஸ் நாளை ஆலோசனை:
தங்களை திமுக கைவிட்டுவிட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் நாளை சத்தியமூர்த்திபவனில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற-சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தங்கபாலு கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுகவின் முடிவு கூட்டணியை பாதிக்காது-கருணாநிதி:
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, மக்களின் தேவையை கருத்தில் கொண்டே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்று முடிவு செய்யப்பட்டது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும்.
தனது தனித்துப் போட்டி முடிவால் மத்தியில் ஆட்சியில் உள்ள கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
எதிர்க்கட்சியினரை அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைக்கிறார் ஜெயலலிதா. திமுகவினர் மீது அவதூறு பரப்பி களங்கம் ஏற்படுத்துகிறார். திமுகவினரை ஒடுக்குவதன் மூலம் சர்வாதிகாரத்தை நிலைப்படுத்த ஜெயலலிதா முயற்சி செய்கிறார். எந்த சர்வாதிகார ஆட்சியும் நிலைத்ததாக வரலாறு இல்லை என்றார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications