மோடி உண்ணாவிரதம்-ஜெ. வாழ்த்து; தம்பிதுரை, மைத்ரேயன் பங்கேற்பு; நிதிஷ்குமார் புறக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நடத்தி வரும் உண்ணாவிரதத்துக்கு அதிமுக முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நரேந்திர மோடிக்கு முதல்வர் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளதோடு தனது கட்சியின் சார்பில் எம்பிக்கள் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோரை உண்ணாவிரதத்துக்கு அனுப்பி வைத்தார்.

இன்று காலை உண்ணாவிரத மேடைக்குச் சென்ற தம்பிதுரை, ஜெயலலிதாவின் வாழ்த்துக் கடிதத்தை நரேந்திர மோடியிடம் அளித்தார். பின்னர் தம்பிதுரையும், மைத்ரேயனும் உண்ணாவிரத மேடையில் அமர்ந்தனர்.

பின்னர் உரையாற்றிய தம்பிதுரை, குஜராத்- தமிழ்நாடு இரு மாநிலங்களுக்கு இடையேயும் வர்த்தகத் தொடர்பு நெடுநாட்களாக இருந்து வருகிறது. தமிழகத்தில் 3ம் முறையாக புரட்சித் தலைவி ஜெயலலிதா முதல்வரானபோது, அந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் நரேந்திர மோடி நேரில் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

அதனால் புரட்சித் தலைவி எங்களை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வரச் சொல்லியிருந்தார். மோடிக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மோடிக்கு பதில் மரியாதை செய்வதற்காகவே புரட்சித் தலைவி எங்களை இந்த உண்ணாவிரத நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு தமிழகத்தில் முன்னர் பதவியில் இருந்த திமுகவும், மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் தான் காரணம். இவர்கள் செய்த மிகப்பெரும் ஊழலால் உலகமே நம்மை ஏளனமாகப் பார்க்கிறது.

அமெரிக்கா கூட மோடியைப் பாராட்டுகிறது என்பது மாநிலத்தில் அவர் மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்களும் அவரது நிர்வாகத் திறனுக்கும் கொடுக்கப்பட்ட மரியாதை. அவரின் முயற்சி வெற்றிபெற தமிழக முதல்வரின் வாழ்த்தைத் தெரிவிக்கிறோம் என்றார் தம்பிதுரை. பின்னர் மைத்ரேயனும் பேசினா்.

ஐக்கிய ஜனதா தளம் புறக்கணிப்பு:

ஆனால், பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் இந்த உண்ணாவிரதத்தை புறக்கணித்துவிட்டது.

அக் கட்சியின் தலைவரும் பிகார் முதல்வருமான நிதிஷ் குமார், இந்த உண்ணாவிரத்துக்கு தனது கட்சியின் சார்பில் யாரையும் அனுப்பி வைக்கவில்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தாலும், பிகாரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு நரேந்திர மோடி வரக் கூடாது என்று தடை விதித்தார் நிதிஷ் என்பதும், அந்த நிபந்தனைக்கு பாஜக பணிந்ததும் நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+