ஜெயலலிதாவுக்கு அத்வானி நன்றி!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்துக்கு வாழ்த்துக் கூறிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி.
அகமதாபாதில் நல்லிணக்கம், அமைதிக்காக சாத்பாவனா எனும் பெயரில் 3 நாள் உண்ணாவிரதம் தொடங்கிய நரேந்திர மோடியை வாழ்த்தி பாரதீய ஜனதா தலைவர் அத்வானி பேசினார்.
அப்போது அவர் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
அருண்ஜெட்லி பேசுகையில், உண்ணாவிரதத்தில் பங்கேற்க தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்ததற்காக ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
பாஜகவும் அதிமுகவும் இதன் மூலம் மேலும் நெருங்கி வர ஆரம்பித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications