தங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது!
சென்னை: தங்கம் விலையில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை சவரனுக்கு ரூ.552 குறைந்து விற்பனையானது.
இது நகை வாங்குவோர் மத்தியில் சிறிய சந்தோஷத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது மற்றும் சர்வதேச அளவிலான தங்க இருப்பு நிலவரம், அமெரிக்க டாலர் மதிப்பு போன்றவை காரணமாக தங்கம் விலை நிலையற்ற தன்மையைக் கொண்டதாகிவிட்டது.
எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மட்டும் சுமார் 6 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சவரன் தங்கம் விலை ஏறியது. இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலை சிறிது குறைந்தது.
ரூ.552 குறைந்தது
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,645-க்கும், பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது.
நேற்று கிராமுக்கு ரூ.69 குறைந்து, ரூ.2,576-க்கும், சவரன் தங்கம் ரூ.552 குறைந்து ரூ.20 ஆயிரத்து 608-க்கும் விற்பனையானது. அதாவது ஒரே நாளில் ரூ.552 குறைந்துள்ளது.
ஆனால் எந்த அளவு விலை குறைகிறதோ, அதைவிட இரு மடங்கு விலை உயர்வதுதான் தங்கம் விஷயத்தில் கடந்த சில தினங்களாக நாம் பார்த்து வரும் போக்காகும்.
எனவே இன்று சனிக்கிழமை அல்லது திங்களுக்குள் இப்போது குறைந்துள்ளதை விட இருமடங்கு விலை உயரும் என எதிர்ப்பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications