போக்குவரத்து வரிவசூலில் அலட்சியம்: மத்திய தணிக்கை துறை அறிக்கை குற்றசாட்டு
சென்னை: தமிழக போக்குவரத்து துறையின் கவனக்குறைவான நடவடிக்கைகளால், கோடிக்கணக்கான ரூபாய் மாநில அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய தணிக்கைத் துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
தமிழக போக்குவரத்து துறையின் 2009-10 வரையுள்ள வரவு-செலவு கணக்குகளை மத்திய தணிக்கை துறை கணக்கிட்டது. அது குறித்து மத்திய தணிக்கை துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 1947ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகன வரி விதிகளின்படி, வாகன உரிமையாளர்கள் வாகன வரி, கூடுதல் நிலுவை வரி என்ற வேறுபாடு உள்ளது.
இதிலும் ஒப்பந்த பஸ்களாகவோ அல்லது நிறுத்த பஸ்களாகவோ பயன்படுத்துவதற்கு இடையேயான வேறுபாட்டை பொறுத்து வரி செலுத்த வேண்டும்.
ஆனால், இந்த வேறுபாடு இல்லாமல் பல போக்குவரத்து அலுவலகங்கள் எந்த வேறுபாடும் இல்லாமல் வசூலித்துள்ளது. கடந்த 2009-10 கணக்குகளை ஆய்வு செய்ததில், 7.79 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை போக்குவரத்து துறை வசூலிக்கப்படாமலேயே விட்டுள்ளது தெரிகிறது.
தமிழகத்தின் கரூர், நெல்லை உள்ளிட்ட இடங்களில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் தணிக்கை செய்யப்பட்டது. இதில் 2008-09ம் ஆண்டில் 120 ஸ்பேர் பஸ்களை ஒப்பந்த பஸ்களாக இயக்க அனுமதிக்கப்பட்டு, தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கான வரி, ஒப்பந்த பஸ்களுக்குரிய வீதத்தில் வசூலிக்கப்படவில்லை. இதில் 7.05 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசால் மூலம் 2008 டிசம்பர் மாதம் முதல், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட சரக்கு வாகனங்களை தமிழகத்தில் பயணிக்க 3,000 ரூபாய் என இருந்த வரி 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
ஆனால், அந்த வரி உயர்வை கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நெல்லை, உள்ளிட்ட 8 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படுத்தவில்லை. இதனால், 36.92 லட்சம் ரூபாய் அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மோட்டார் வாகன வரி சட்டப்படி, பிறமாநில ஆம்னி பஸ்களுக்கு தற்காலிக உரிமம் வழங்குவதற்காக வரி வசூலிப்பில் சரியாக கணக்கிடாமல் விட்டதால், 37.03 லட்சம் ரூபாய் அளவிற்கு குறைவாக வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை, சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சுட்டிக் காட்டியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications