அமெரிக்காவில் விமான விபத்து: 3 பேர் பலி, 54 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் நடந்த சாகச நிகழ்ச்சியில் விமானம் ஒன்று பார்வையாளர் பகுதியில் சென்று விபத்திற்குள்ளானதில் பைலட் உட்பட 3 பேர் பலியாகினர். 54 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் நிவேதா மாகாணத்தில் உள்ள ரினோ என்ற இடத்தில் ஆண்டுதோறும் நடக்கும் விமான சகாச நிகழ்ச்சி பிரபலமானது. அமெரிக்கா நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடந்த இந்த போட்டியை காண பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் உட்பட 10,000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.

நிகழ்ச்சியின் போது, வானில் சாகசத்தில் ஈடுபட்ட விமானம் ஒன்று பார்வையாளர்கள் பகுதிக்கு சென்று விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் விமானத்தின் பைலட் உட்பட 3 பேர் பலியாகினர்.

54 பேர் காயமடைந்தனர். இதில் 25 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்தை அடுத்து ஸ்டியாடு விமான நிலையம் மூடப்பட்டு, விசாரணை துவங்கியுள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில், விமானத்தை ஒட்டியவர் பிளோடா மாகாணத்தை சேர்ந்த ஜிம்மி லீவார்டு(80) என்பது தெரிந்துள்ளது. இவர் 2ம் உலகப்போரில் அமெரிக்க படைக்காக விமான ஓட்டியவர். மேலும் பல ஹாலிவுட் படங்களில் விமான சாகசம் செய்து காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் பார்வையாளர்களின் மீது விழாமல் இருக்க, பைலட் கடுமையாக முயற்சி செய்ததால் அவர் இறந்திருக்கலாம் என தெரிகிறது. விமான விபத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக இங்கு 4 விமான பைலட்கள் விபத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+