உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதில் பெயர் விடுபட்டவர்கள், பெயரைச் சேர்க்க விரும்புபவர்கள், பெயரை நீக்க விரும்புபவர்கள், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரை அதை மேற்கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபரில் முடிவடைகிறது. அக்டோபர் மாதம் 24ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கி விட்டன. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் தேர்தலை நடத்த தயாராக உள்ளது.

இந்த நிலையில் இன்று வாக்காளப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. இதுதொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்குமான சாதாரணத் தேர்தல்கள் தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று

வருகின்றன. நடப்பு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல்கள் வெளியிடும் பணி இறுதி நிலையில் உள்ளது.

புகைப்பட வாக்காளர் இறுதி பட்டியல்கள் 19-9-2011ல் தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் வெளியிடப்பட உள்ளன. உள்ளாட்சி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடல் குறித்தான அறிவிப்புகள் தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்த்தல், நீக்கல். திருத்தம் குறித்தான பொது மக்களின் கோரிக்கைகளை உரிய படிவங்களில் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் (வருவாய் கோட்டாட்சியர்) சமர்ப்பித்து உரிய ஆணைகள் வெளியிடப்பட்ட உடன் உள்ளாட்சி வாக்காளர் பட்டியலுக்கு உரிய துணைப் பட்டியல்கள் வெளியிடப்படும்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரை தொடர்புடைய. சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பட்டியலில் உள்ள அனைவரும் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் 2011ல் வாக்கு அளிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்த விதிகளின்களின்படி, தமிழ்நாடு ஊராட்சித் தேர்தல் விதிகள் 1995ன் விதி 21 மற்றும் தமிழ்நாடு பேரு்ராட்சிகள். மு்ன்றாம் நிலை நகராட்சிகள். நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகள் 2006ன் விதி 19 ஆகியவற்றின்படி உரிய திருத்தங்கள் தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்படும்.

மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையரால் உரிய அறிவிப்புகள் வெளியிடப்படும், பொதுமக்கள் தேவைப்படின் திருத்தங்கள் குறித்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான கோரிக்கை மனுக்கள் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் அளிக்கப்பட வேண்டும். இவ்வாணையத்திற்கு அனுப்புதல் கூடாது. நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தகுதியுள்ள எவரும் வாக்களிக்க இயலாதநிலை இருக்கக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் கருதுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் எப்போது?

இதற்கிடையே, தேர்தல் தேதி குறித்த அறிவிப்பும் இன்றே வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சட்டசபை இடைத் தேர்தல் முடிந்ததும், அக்டோபர் 19 அல்லது 21ம் தேதியில் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+