நான் வீணாகத்தான் போட்டியிடுகிறேன்- தேர்தல் மன்னன் பத்மராஜன் 'பளிச்' பேட்டி!

திருச்சி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியது. அப்போது பத்மராஜன் என்ற சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார். பத்மராஜனுக்கு தேர்தல் மன்னன் என்று பெயர். ஒரு தேர்தல் விடாமல் தொடர்ந்து போட்டியிட்டு டெபாசிட்டை பறி கொடுத்தபடி இருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலையும் கூட இவர் விடுவதில்லை. இன்று அவர் 123-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கே.பத்மராஜன் (52). அவர் கடந்த 1988-ம் ஆண்டு முதல் நாட்டில் நடக்கும் பல்வேறு தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.
அவர் பி. வி. நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்கள், திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, எதியூரப்பா, தேவே கெளடா, ஏ. கே. அந்தோணி என பல முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட முறை சுயேச்சையாகப் போட்டியிட்டதற்காக இவர் கின்னஸ் சாதனையும் படைத்தவராவார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தேர்தலில் வெற்றி பெற மாட்டேன் என்று நன்றாகத் தெரிந்தும் ஏன் வீணாகப் வேட்புமனு தாக்கல் செய்கிறீர்கள் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். அவர்கள் சொல்வது என்னவோ உண்மை தான். கடந்த 1988-ம் ஆண்டு முதல் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். 1991-ம் ஆண்டு ஆந்திராவில் நரசிம்ம ராவுக்கு எதிராக போட்டியிட்டபோது என்னை கடத்திவிட்டனர்.
இந்தியா முழுவதும் சட்டசபை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன். கடந்த 2003-ம் ஆண்டு லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றேன். கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளேன்.சாதனைக்காகவே இப்படிப் போட்டியிட்டு வருகிறேன் என்றார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications