வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி 2.66 லட்சம் பேர் விண்ணப்பம்: பிரவீன் குமார்
சென்னை: வாக்காளர் பட்டியிலில் தங்கள் பெயரைச் சேர்க்கக் கோரி 2. 66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட தகவல்,
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்படும். இதன்படி ஜனவரி மாதம் 1-ம் தேதி அன்று 18 வயதை நிறைவு செய்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 4 கோடியே 59 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப் பணிக்குப் பிறகும் ஏராளமான பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். தமிழக சட்டசபை தேர்தலின்போது 4 கோடியே 70 லட்சத்து 49 ஆயிரத்து 529 வாக்காளர்கள் இருந்தனர். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இருந்து ஏராளமான பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
நேற்று வரை 2 லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இவர்கள் கொடுத்துள்ள விவரங்களை வாக்குச்சாவடி அதிகாரிகள் அந்தந்த முகவரிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வார்கள். அதன்பிறகு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள். இதன் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் துணை பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications