பாழும் கிணற்றில் சாக்கில் கட்டிய நிலையில் 5 வயது சிறுமியின் உடல் மீட்பு
குடியாத்தம்: வேலூரில், 5 வயது சிறுமியை கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி பாழும் கிணற்றில் எறிந்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனூர் காளியம்மன்பட்டி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ராஜா (35). இவரது மனைவி அனிதா. கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு ஹரிப்பிரியா (7), ராஜேஸ்வரி (5) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
வழக்கம் போல ஹரிப்பிரியாவும், ராஜேஸ்வரியும் பள்ளிக்கு சென்றனர். மாலையில் பள்ளி விடுவதற்கு சற்றுமுன்பாக ராஜேஸ்வரி இயற்கை உபாதைக்காக வெளியே சென்றதாக தெரிகிறது. அதன்பின் அவள் வகுப்பறைக்கு வரவே இல்லை.
மாணவி மாயமானது குறித்து ராஜேஸ்வரியின் பெற்றோர் மற்றும் போலீசாருக்கு ஆசிரியர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்திய போது, பள்ளியில் சற்று தொலைவில் உள்ள பாழும் கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கிடந்த ஒரு மூட்டையை கண்டுபிடித்தனர். அதை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் வெளியே எடுத்து பிரித்து பார்த்த போது, காணாமல் போன சிறுமியின் உடல் கிடைத்தது.
கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கிடைத்த சில தடயங்களையும் சேகரித்து கொண்டனர். வகுப்பறையில் இருந்து தனியே வெளியே வந்த சிறுமியை மர்மநபர்கள் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து, கிணற்றில் ஏறிந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications