பொன்முடி ஜாமீன் மனு- தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
விழுப்புரத்தில் தனக்குச் சொந்தமான சிகா அறக்கட்டளைக்காக நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கூறி பொன்முடி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு செய்தார்.அங்கு அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்தார். அங்கும் நிராகரிக்கப்பட்டது
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் பொன்முடி. அவர் தாக்கல் செய்துள்ள மனுவை நீதிபதி சுந்தரம் இன்று விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில் ஜாமீன் அளிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடியின் ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுக தாங்கள் தயாராகி வருவதாக பொன்முடி தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications