சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் காலாண்டுத் தேர்வு தொடங்கியது
சென்னை: 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் பாடக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் காலாண்டுத் தேர்வு இன்று தொடங்கியது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு கடுமையான சட்டப் போராட்டத்தை சந்திக்க வேண்டி வந்தது. இறுதியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் குழப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பு்ம், பாடத் திட்டம் வழங்குதல் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு தாமதம் ஏற்பட்டன. இதனால் மிகக் குறுகிய காலத்திற்குள் காலாண்டுத் தேர்வை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் கூட பல பள்ளிகளில் முழுமையாக புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் செப்டம்பர் 22ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று முதல் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கின. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலாண்டுத் தேர்வு இன்று தொடங்கியது. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. அதேசமயம், தனியார் பள்ளிகளில் ஏற்கனவே தேர்வு தொடங்கி விட்டது.
1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் காலாண்டுத் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications