குற்றாலம் அருவியில் குளித்த பெண்களை புகைப்படம் பிடித்த வாலிபர் கைது
குற்றாலம்: குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்த பெண்களை போட்டோ மற்றும் வீடியோ எடுத்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குற்றாலத்தில் உள்ள அருவியில் குளிப்பதற்கு தினமும் எண்ணற்ற மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்கு என தனித்தனி இடங்கள் உள்ளன. பாலியல் சில்மிஷங்களை தவிர்க்க ஆங்காங்கே ஆண் மற்றும் பெண் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்த ஆண்கள் பகுதியில் ஒருவர் கேமராவுடன் சுற்றி திரிந்தார். சிறிது நேரத்தில் அவர் பெண்கள் பகுதியின் அருகில் சென்று அங்கு குளித்து கொண்டிருந்த பெண்களை போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
இதை கவனித்த மற்றவர்கள் அவரை அழைத்து கண்டித்துள்ளனர். அதனால் கண்டித்தவர்களுக்கும் அந்த வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கண்டித்தவர்களில் சிலர் இது குறித்து அங்கு பாதுகாப்பில் நின்ற போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரிடம் இருந்த கேமராவை பரிசோதித்த போது, அவர் சில பெண்களை படம் பிடித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார் விசாரித்தனர். இதில் அவர் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பாலாஜி என்பது தெரிந்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications