கர்நாடகத்தின் ரெய்ச்சூரில் ஊட்டச்சத்து குறைவால் ஓராண்டில் 1,000 குழந்தைகள் பலி

கர்நாடக மாநிலம், ரெய்ச்சூர் மாவட்டத்தில் அதிகளவிலான விவசாய நிலங்கள் உள்ளன. விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட இந்த மாவட்டத்தில் கடந்தாண்டு போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களை பசியும், பட்டினியும் வாட்டி வதைத்தது. இதில் முக்கியமாக தேவதுர்கா, சிந்தனூர், மான்வி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால் சத்தான உணவு இல்லாமல், கடந்த ஒராண்டில் மட்டும் ரெய்ச்சூர் மாவட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளதாக கணக்கெடுப்பில் தெரிகிறது. மேலும் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தகுந்த ஊட்டச்சத்து கிடைக்காமல் தவித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல் கூறியதாவது, ரெய்ச்சூர் மாவட்டத்தில் உறவு முறையில் திருமணம் செய்யும் முறை அதிகம். இதனால் ரத்த தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தான் அதிகளவில் மெலிந்து காணப்படுகின்றனர். இந்த குழந்தைகளுக்கு தகுந்த ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.
இதுகுறித்து மாநில முதல்வர் சதானந்த கவுடா கூறியதாவது, ரெய்ச்சூரில் குழந்தைகள் இறப்பது குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் ரெய்ச்சூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் தவிக்கும் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சிகிச்சை மற்றும் சத்துணவு அளிக்க உத்தவிட்டுள்ளேன். மாவட்டத்தின் கிராமப்புறங்களில் மக்களுக்கு தேவையான ரேசன் பொருட்களை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன், என்றார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications