பல் மருத்துவக் கவுன்சில் முன்னாள் தலைவர் வீட்டில் சிபிஐ ரெய்டு: சொத்துக் குவிப்பு வழக்கு
டெல்லி: இந்திய பல் மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் சேர்மன் அனில் கோஹ்லி வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை செய்து அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்திய பல் மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் சேர்மன் அனில் கோஹ்லி. அவர் தனது பதவிக் காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக புகார்கள் எழுந்தன. குறிப்பிட்ட சில நிறுவனங்களில் மட்டும் சோதனை நடத்துவது, அனுமதியை ரத்து செய்யப் போகிறேன் என்று கூறி பல் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து பெருந்தொகையைப் பெற்றது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கோஹ்லி மீது புகார்கள் எழுந்தன.
இதயைடுத்து இது குறி்த்து விசாரணை நடத்த சுகாதார அமைச்சகம் 2 பேர் கொண்ட குழுவை நியமித்தது. இந்நிலையில் சிபிஐ கோஹ்லியின் வீடு மற்று டெல்லி லஜ்பட் நகர், குல்மோஹார் பூங்கா போன்ற இடங்களில் அவருக்கு சொந்தமான கட்டிடங்களில் சோதனை செய்தது. இதையடு்தது அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications