மார்க்சிஸ்ட் கட்சியில் கன்னியாகுமரியில் தனித்துப் போட்டி- 3 நகராட்சி, 20 பேரூராட்சிகளில் போட்டி

அதிமுகவுடன் இடப் பங்கீடு தொடர்பாக இடதுசாரி கட்சிகள் பெரும் குழப்பத்தில் உள்ளன. தேமுதிக ஒரு பக்கம் பிய்த்துக் கொண்டு போய் விட்ட நிலையில் இடதுசாரிகள் மட்டும் இன்னும் தெளிவான முடிவெடுக்க முடியாமல் குழம்பி நிற்கின்றனர்.
இந்த நிலையில், திடீரென கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஒரு அதிரடி அறிவிப்பு வந்துள்ளது. அந்த மாவட்ட சிபிஎம் தலைவர் முருகேசன், தனது மாவட்டத்தி்ல சிபிஎம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், குளச்சல், பத்மநாபபுரம் மற்றும் குழித்துரை நகராட்சித் தலைவர் பதவிக்கு சிபிஎம் போட்டியிடும். அதேபோல 20 பேரூராட்சிகளிலும் எங்களது வேட்பாளர்களை நிறுத்துவோம் எனக் கூறியுள்ளார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனித்துப் போட்டியிடுவதாக இதுவரை சிபிஎம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வாமாக தகவல் ஏதும் இல்லை. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் 3 நகராட்சி, 20 பேரூராட்சிகளில் போட்டியிடப் போவதாக அந்த மாவட்ட தலைவர் அறிவித்துள்ளது கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கருத வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications