குஜராத்தில் மாபெரும் பேரணி நடத்தும் முதல்வர் நரேந்திர மோடி
அகமதாபாத்: அண்மையில் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் மாபெரும் பேரணி நடத்தவிருக்கின்றார். இதில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் தான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேசிய ஒருமைப்பாட்டிற்காக 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில் இன்று தனது அரசுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை எதிர்த்து மாபெரும் பேரணி நடத்தவிருக்கிறார். இந்த பேரணி வஸ்த்ராலில் நடக்கிறது.
தான் நடத்திய பேரணிகளிலேயே இது தான் மிகப் பெரிய பேரணி என்று மோடி தெரிவித்துள்ளார். அநீதியை ஒழியுங்கள், குஜராத்தை காப்பாற்றுங்ள் என்று கோஷமிடவிருக்கின்றனர்.
குஜராத் மாநில ஆளுநர் மோடியிடம் கேட்காமலேயே ஊழலை விசாரிக்க லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசராணைக்கு வரவிருக்கையில் மோடி நடத்தும் இந்த பேரணி முக்கியத்துவம் பெறுகிறது.
பேரணி முடிவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மோடி பேசவிருக்கிறார். இந்த கூட்டத்தில் குஜராத் மட்டுமின்றி பிற மாநிலத்தவர்களும் கலந்து கொள்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோடி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தும் காங்கிரஸுக்கு தனது பலத்தை காண்பிக்கத் தான் இந்த பேரணியை மோடி நடத்துகிறார் என்று கூறப்படுகிறது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications