இலங்கை கிழக்கு மாகாண பள்ளிகளுக்கு 1,200 கம்ப்யூட்டர்களை வழங்கியது இந்தியா
திரிகோணமலை: இலங்கையின் கிழக்கு மாகாண பகுதிகளில் உள்ள 261 பள்ளிகளுக்கு 1,250 கம்ப்யூட்டர்களை இந்தியா வழங்கியுள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும், தமிழ் முஸ்லீம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இங்குள்ள பள்ளி குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி பெறும் வகையில், அப்பகுதிகளில் உள்ள 261 பள்ளிகளுக்கு இந்திய அரசு 1,250 கம்ப்யூட்டர்களையும், 160 லேசர் பிரிண்டர்களையும் இலவசமாக வழங்கியுள்ளது.
இலங்கையின் திரிகோணமலையில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக ஆணையர் அசோக்.கே.காந்தா, பள்ளி தலைமையாசிரியர்களிடம் கம்ப்யூட்டர்களை வழங்கினார். பள்ளிகளில் இணையதள வசதியை ஏற்படுத்தி, பள்ளி மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் பயன்பாட்டை கற்பிக்குமாறு தலைமை ஆசிரியார்களிடம் கேட்டு கொண்டார்.
மேலும், இலங்கையின் பரம்பரிய ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவ முறைகள் குறித்து பயிற்சி அளிக்கும் வகையில், இலங்கை கிழக்கத்திய பல்கலை கழகத்திற்குத் தேவையான உபகரண உதவிகளையும் இந்தியா செய்கிறது. இதற்கான உதவிகளை அசோக்.கே.காந்தா வழங்கினார்.
திரிகோணமலை-மட்டக்களப்பு இடையேயான ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், சமீபத்தில் ரயில் பெட்டிகளை இந்திய அரசு வழங்கியது. இலங்கையின் கிழக்கு பகுதியில் பஸ் போக்குவரத்தை மேம்படுத்த கடந்தாண்டு 20 பஸ்கள் வழங்கப்பட்டது. மேலும் இலங்கையில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சில விதவைகளுக்கு சிறப்பு தொழிற்கல்வியை வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் இந்திய அரசு உதவி வருகிறது.
ஆனால் இந்தியாவின் நேரடி நிதியுதவியை இதுவரை எந்த வகையிலும் இலங்கை அரசு முழுமையாக பயன்படுத்தவில்லை. அதேபோல போர் பாதித்த பகுதிகளில் தமிழர்களை மறு குடியேற்றம் செய்வதிலும் இலங்கை அரசு எந்தவித அக்கறையும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications