கேரளாவி்ல் பள்ளி வாகனம் ஆற்றில் கவிழ்ந்தது: 3 குழந்தைகள் பலி
திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி வாகனம் ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 3 பள்ளிக் குழந்தைகள் பலியாகினர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
திருவனந்தபுரத்தை அடுத்த கழக்குட்டா பகுதியில் ஜோதி நிலையம் என்ற பள்ளி உள்ளது. இன்று மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 30 குழந்தைகளுடன் பள்ளி வேன் புறப்பட்டது. அதில் இருந்தவர்கள் அனைவரும் 12 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
சன்னம்கரா பகுதியில் ஆற்றின் வழியாக வந்தபோது, திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றில் சென்ற படகின் மீது கவிழ்ந்தது. இதில் பள்ளி வாகனத்தில் இருந்த 30 குழந்தைகளும் ஆற்றில் மூழ்கினர். அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக குழந்தைகளை மீட்டனர்.
இதில் 3 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். பெரும்பாலான குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 11 பேர் எஸ்.ஏ. டி. மருத்துவமனையிலும், 8 பேர் மிஷன் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள குழந்தைகளை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். ஆற்றில் தண்ணீர் வேகமாகச் செல்வதால் குழந்தைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஆற்றில் கவிழ்ந்த பள்ளி வேன் வெளியே எடுக்கப்பட்டது. கட்டுப்பாட்டை இழந்ததால் வேன் ஆற்றில் கவிழ்ந்ததாக உயிர் பிழைத்த பள்ளி வேன் டிரைவர் போலீசாரிடம் தெரிவித்தார். மீட்பு பணிகளில் போலீசார், தீயணைப்பு வீரர்களுடன், ஊர் மக்களும் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக இதே இடத்தில் வாகனம் கவிழ்ந்து 19 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications