பொன்முடி, உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழி்ப்புத் துறை அதிகாரிகள் ரெய்ட்!

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தான் அமைச்சராக இருக்கையில் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து மாநில போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான நிலத்தை சிகா கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்க அபகரித்துள்ளார். இந்த அறக்கட்டளையில் அவரது மாமியாரும் ஒரு உறுப்பினர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த 31-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் பொன்முடி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழி்பபுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. மகேந்திரன் உத்தரவின் பேரில் ஐ.ஜி. குணசீலன், டி.ஐ.ஜி. வெங்கட்ராமன், எஸ்.பி.துரைகுமார் மேற்பார்வையில் 15 இடங்களில் இன்று காலை அதிரடி சோதனை நடந்தது.
சோதனை நடந்த இடங்களின் விவரம் வருமாறு,
15 இடங்களில் சோதனை நடத்த 15 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டது. சென்னை, விழுப்புரம், திருச்சி, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்துவதற்காக போலீஸ் குழு நேற்றிரவே பல்வேறு இடங்களுக்கு சென்றது.
விழுப்புரத்தில் சண்முகாபுரம் காலனி திருப்பாழ்வார் தெருவில் உள்ள பொன்முடியின் வீட்டில் இன்று காலை 7 மணிக்கு சோதனை நடந்தது. இன்று காலை சோதனை நடத்த வேண்டும் என்பதற்காக சென்னை மற்றும் திருச்சியில் இருந்து 3 வேன்களில் 50-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றிரவே விழுப்புரம் சென்றுவிட்டனர்.
அவர்கள் 4 குழுக்களாகப் பிரிந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையிலான 10 பேர் கொண்ட குழு பொன்முடி வீட்டில் சோதனை நடத்தியது. அவர்கள் சோதனை நடத்தியபோது பொன்முடி வீட்டுக்கு முன்பு விழுப்புரம் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இது குறி்த்து தகவல் அறிந்த திமுக தொண்டர்கள் பொன்முடி வீட்டுக்கு முன்பு கூட முயன்றனர். ஆனால் அவர்கள் யாரையும் அந்த பகுதிக்குள் கூட நுழையவிடவில்லை.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு காந்தி சிலை அருகே உள்ள பொன்முடியின் தம்பி டாக்டர் தியாகராஜனுக்கு சொந்தமான மரகதம் மறுத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது. விழுப்புரம் பழைய நீதிமன்ற ரோட்டில் உள்ள பொன்முடி குடும்பத்தாரின் சிகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் மணிவண்ணன் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
சென்னையில் சைதாப்பேட்டை, எழும்பூர், கே.கே. நகர், அடையார், வேப்பேரி ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.
அடையார் கிரீன்வேஸ் சாலை ரமணியம் டவர்சில் பொன்முடியின் மூத்த மகன் கவுதம் வசிக்கிறார். அவர் நடத்தும் சூர்யா கல்வி அறக்கட்டளை மற்றும் பெசன்ட்மைன் எண்டர்பிரைஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள பொன்முடியின் இளைய மகன் டாக்டர் அசோக்கின் வீட்டில் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுசாமி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை 7. 30 மணி முதல் சோதனை நடத்தினார்கள்.
கே.கே.நகர் ஆர்.கே.சண்முகம் சாலையில் உள்ள கே.எம். நர்சிங் ஹோம், கே.எம். மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளிலும், அதே தெருவில் உள்ள பொன்முடியின் சம்பந்தி பாலசுப்பிரமணியம் வீட்டிலும் சோதனை நடந்தது.
எழும்பூர் எத்திராஜ் சாலையில் பொன்முடிக்கு நெருக்கமான நஜுமுதீன் என்பவரின் வீடு உள்ளது. அங்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். நஜுமுதீனுக்கு சொந்தமாக பர்னாஸ் இன்டர்நேஷனல் என்னும் பாதுகாப்பு கருவிகள் விற்பனை செய்யும் நிறுவனம் வேப்பேரியில் உள்ளது. அங்கும் சோதனை நடத்தப்பட்டது.
இதே போன்று புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள பொன்முடியின் தம்பி பல் டாக்டர் ராஜசிகாமணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். திருச்சியில் ஒருவரது வீட்டிலும், கடலூர் முதுநகர் ரோட்டில் உள்ள பொன்முடி குடும்பத்தாரின் விஷால் ஹீரோ மோட்டார் சைக்கிள் ஷோரூமிலும் சோதனை நடத்தப்பட்டது.
ஜாமீன் மனு தள்ளபடி:
முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் பொன்முடியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருவாரூரில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாகக் கூறி பொன்முடியை திருவாரூர் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரி கடந்த 19 -ம் தேதி திருவாரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் ஜாமீன் கோரி திருவாரூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளங்கோ முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் பொன்முடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவி்ட்டார்.












Click it and Unblock the Notifications