நச்சரிப்பு அழைப்புகள், எஸ்.எம்.எஸ்களில் இருந்து இன்று முதல் விடுதலை!
டெல்லி: இந்த வாரத்தில் இருந்து தேவையில்லாத தொலைபேசி விளம்பர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மொபைல்போன் இணைப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு.
இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. "தேவையற்ற அழைப்புகளின் பதிவு" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். நீங்கள் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். அவ்வாறு புகார் கொடுக்கையில் விளம்பர அழைப்பு வந்த நேரம், தேதி ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும்.
இல்லையென்றால் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம். தொல்லை செய்ய வேண்டாம் என்று பதிவு செய்தவர்களுக்கு விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ. 2. 5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. ரத்த தானம் வேண்டுபவர்கள் நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். மட்டுமே இனி அனுப்ப முடியும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications