மன்னை எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவில் டி.ஆர்.பாலு பங்கேற்பு- ரயில்வேக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் மன்னை எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவில் பங்கேற்று, உறுதிமொழிகளைத் தரும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டது தொடர்பாக ரயில்வேக்கு மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளும் முழுமையாக அமல்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மன்னை எக்ஸ்பிரஸ்' இயக்குவதற்கு தொடர் வண்டித்துறையால் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரிய போது, அரசியல்வாதிகள் பங்குபெற மாட்டார்கள், விழா நடத்துவதில்லை என்றும் குறிப்பிட்டே அனுமதி கோரப்பட்டது. அதனடிப்படையில் மாநிலத் தேர்தல் ஆணையம் இசைவு அளித்தது. ஆனால், தற்போது பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டும், முன்பதிவினை தொடங்கி வைத்தும் சில அறிவிப்புகளை வெளியிட்டும் உள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
எனவே, தொடர்வண்டியை இயக்குவதற்கு பெற்ற இசைவை தவறாக பயன்படுத்துவது குறித்து 2 நாட்களுக்குள் அறிக்கை அனுப்புமாறு தொடர்வண்டித்துறை சென்னை செயலாக்க மேலாளருக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக ரயில்வேதுறை மாற்றியுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பியுமான டி.ஆர்.பாலு கலந்து கொண்டார். முதல் டிக்கெட்டை வாங்கிக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் (ரெயில் எண் 16180) மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மொத்தம் 17 பெட்டிகள் இடம் பெற்றுள்ளன. இதில் முதல் வகுப்பு ஏ.சி. ஒரு பெட்டி, 2-ம் வகுப்பு ஏ.சி. 2 பெட்டிகள், 3-ம் வகுப்பு ஏ.சி. ஒரு பெட்டி, 2-ம் வகுப்பு தூங்கும் வசதி 7 பெட்டிகள், முன்பதிவில்லாத 6 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும். செவ்வாய்க்கிழமை செல்லும் முதல் ரயிலில் முதல் பயணியாக நான் செல்கிறேன் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்துதான் ரயில்வே துறைக்கு மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications