ரூ.2,500 கோடி எரிபொருள் பாக்கி: சென்னையில் 13 கிங்பிஷர் விமானங்கள் ரத்து!

எரிபொருள் வழங்கிய வகையில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு கிங்பிஷர் விமான நிறுவனம் 2,500 கோடி ரூபாயை பாக்கி வைத்துள்ளது. இதனால் எரிபொருள் வழங்குவதை அந்த நிறுவனம் நிறுத்திவிட்டது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 13 கிங்பிஷர் விமானங்கள் இன்று (புதன்கிழமை) முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு செல்லும் 4 விமானங்கள் அடங்கும்.
காலை 4.20 மணிக்கு போர்ட்பிளேயர் செல்லும் விமானமும், காலை 5.40 மணிக்கு கோவை செல்லும் விமானமும், காலை 9.40 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும் விமானமும், பகல் 11.45 மணிக்கு திருச்சி செல்லும் விமானமும், பகல் 1.55 மணிக்கு ராஜமுந்திரி செல்லும் விமானமும், பகல் 2.50 மணிக்கு சேலம் செல்லும் விமானமும், பகல் 3 மணிக்கு மதுரை செல்லும் விமானமும், இரவு 8 மணிக்கு கொச்சி செல்லும் விமானமும் ரத்தாகி உள்ளன.
இந்த விமானங்களில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும். அல்லது வேறு விமானங்களில் செல்ல ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும், கிங்பிஷர் விமான நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திடம் எரிபொருளை வாங்கி சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், புனே, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications
