டெல்லியில் ஜும்மா மசூதி அருகே 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 7 பேர் பலி, 25 பேர் காயம்
டெல்லி: டெல்லி ஜும்மா மசூதி அருகே 70 ஆண்டு பழமை வாய்ந்த 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர், 19 பேர் காயம் அடைந்துள்ளனர்.
டெல்லி சாந்தினி மகால் பகுதியில் ஜும்மா மசூதி அருகே 70 ஆண்டு பழமை வாய்ந்த 3 அடுக்குமாடி கட்டிடம் நேற்றிரவு 8 மணிக்கு திடீர் என்று இடிந்து விழுந்தது. இதில் 7 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்தனர், 25 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நரேன் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த கட்டிடத்திற்கு அருகே சட்டவிரோதமாக நடந்து வந்த கட்டுமானப் பணியால் தான் 3 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்ததாக போலீசார் தெரிவித்தனர். இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து உள்ளூர் எம்.எல்.ஏ. சோயப் இக்பால் கூறியதாவது,
இடிந்த கட்டிடத்திற்கு அருகே சட்டவிரோதமான கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அதனால் தான் இந்த கட்டிடம் இடிந்தது. இந்த இடத்தில் சட்டவிரோதமாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது என்று நான் போலீசாரிடம் தொலைபேசி மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தேன். ஆனால் அதற்குள் இந்த சம்பவம் ந்டந்துவிட்டது என்றார்.
இடிந்து விழுந்த கட்டிடம் குறுகிய தெருவில் இருப்பதால் மீட்புப் பணிகளை துரிதமாகச் செய்ய முடியவில்லை. உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 70 ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் புதிதாக கதவு மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கட்டிடத்தை தாங்கும் தூண் இடிந்து விழுந்து தான் இந்த சம்பவம் நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் கிழக்கு டெல்லியில் லக்ஷ்மி நகர் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70 பேர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications