தங்கம் விலை... இன்று ரூ 328 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கத்தின் விலை இன்று மீண்டும் சவரனுக்கு ரூ 328 குறைந்தது.
தங்கத்தின் விலையில் அசாதாரண ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
தொடர்ந்து விலை உயர்ந்து வந்த தங்கம் சனிக்கிழமை அதிரடியாக குறைந்தது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 232 ஆக விற்றது.
நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.424 குறைந்து ரூ.19 ஆயிரத்து 808 ஆக இருந்தது. நேற்று மீண்டும் பவுனுக்கு ரூ.312 அதிகரித்து ரூ.19 ஆயிரத்து 808 ஆக விற்றது.
இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.328 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 760 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,470-க்கு விற்கிறது.
தங்கம் விலை நிலையற்றதாக இருப்பதற்கு இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் விலை ஏற்ற இறக்கமே காரணம் என மார்க்கெட்டில் காரணம் கூறப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.52 ஆயிரத்து 505 ஆகவும், ஒரு கிராம் ரூ.56.20 ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications