சபரிமலை சீசன்: பாதுகாப்பு குறித்து அக்டோபர் 23ல் தென்மாநில அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம்
திருவனந்தபுரம்: அடுத்த மண்டல சீசனில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசிப்பதற்காக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட தென் மாநில அறநிலையத்துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் வரும் அக்டோபர் மாதம் 23-ம் தேதி கோட்டயத்தில் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு சபரிமலை சீசனின்போது, ஜனவரி மாதம் 14ம் தேதியன்று மகரஜோதியைப் பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அப்போது ஜோதி பார்த்து விட்டுத் திரும்பிய பக்தர்கள், புல்மேடு என்ற இடத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கிக் கொண்டனர். எந்தவித பாதுகாப்பும் இல்லாத காரணத்தால், 102 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த அவல நிலைக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரள அரசும், சபரிமலை கோவில் நிர்வாகமும், வனத்துறையுமே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டு மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் நவம்பர் மாதம் 15-ம் தேதி திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் விழாவை நடத்த சபரிமலை தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.
வழக்கமாக மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சமயங்களில் தான் சபரி்மலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்துதான் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள்.
பக்தர்களின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்தாலும் அவர்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்படுவதில்லை என நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வருகிறது. இது குறித்து ஆலோசிப்பதற்காக தென் மாநில அறநிலையத்துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் கடந்த சில ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கூட்டம் வரும் அக்டோபர் மாதம் 23-ம் தேதி கோட்டயத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில அறநிலையத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications