திருச்சி தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க நடவடிக்கை- பிரவீன் குமார்
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு குறுக்கிடுவதால் திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.
திருச்சி மேற்குத் தொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 17ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரவீன் குமார் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு வருவதால், திருச்சி மேற்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. எனவே அதை ஏற்று வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்கநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து அக்டோபர் 20ம் தேதிக்கு வாக்கு எண்ணிக்கை தள்ளிப் போகும் என்று தெரிகிறது.
பிரவீன் குமார் மேலும் கூறுகையில், திருச்சி மேற்குத் தொகுதியில் அனைத்து வாக்குச் சாவடிகளுமே பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே 5 கம்பெனி துணை ராணுவப் படையை பாதுகாப்புக்குக் கோரியுள்ளோம். அதில் 2 கம்பெனி படையினர் வந்து விட்டனர். வாக்குப் பதிவுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications