ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் இடத்தை அறிய வருகிறது புதிய திட்டம்

இந்தியாவில் அதிகளவில் மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ஆனால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில்களின் அளவு இல்லை. ரயில்களின் தாமதம் மற்றும் இருக்கும் இடம் ஆகியவற்றை அறிந்து கொள்வது சிரமமாக உள்ளது.
பயணிகளின் இந்த சிரமத்தை போக்கவே, 'பேபி சிம்ரன்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி செயற்கைகோளின் உதவியுடன் ரயில்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற தகவலை பெறலாம். 'சேட்லைட் இமேஜிங் பார் ரயில் நேவிகேஷன்' என்பதை சுருக்கி, 'பேபி சிம்ரன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் பரிசோதனை முறையாக ராஜதானி எஸ்பிரஸ் ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து அத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் கூறியதாவது, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆய்வு மற்றும் தரநிலை அமைப்பு உடன் ஐ.ஐ.டி. நிறுவனமும் இணைந்து செயலாற்றி வருகிறது. திட்டப்பணிகள் முடிவு நிலையை எட்டியுள்ள நிலையில் விரைவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
முதலில் 4 ரயில்கள் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன்பின் மற்ற ரயில்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். 100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், ஜி.பி.எஸ். நவிகேஷன் மற்றும் ரேடியோ அலைகள் மூலம் செயல்படும். இதன்மூலம் ரயில் நிலையங்களின் டிஜிட்டல் வரைபடத்தையும் பெற முடியும்.
இந்த திட்ட செயல்பாட்டிற்கு வரும் நிலையில், ஒருவரால் ரயில்கள் எங்கே இருக்கிறது, எத்தனை வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது உள்ளிட்ட தகவல்களை ஒரு எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்து கொள்ளலாம், என்றார்.
நம்ம ஊர் ரயில்களுக்கு 'பேபி சிம்ரன்' என்று வருமோ?
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications