பாகிஸ்தானியர் கொலை வழக்கில் விடுதலையான 17 இந்தியர்களுக்கு மீண்டும் சிறை
ஷார்ஜா: பாகிஸ்தான் நாட்டவரை கொலை செய்த வழக்கில் அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்ட 17 இந்தியர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஷார்ஜாவில், கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானியர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் 17 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த ஷார்ஜா நீதிமன்றம் 17 பேருக்கும் கடந்த 2010ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த 17 பேரும் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்குவதாக சமரசம் பேசினர். இதற்கு சம்மதம் தெரிவித்த கொலை செய்யப்பட்டவரின் உறவினர் அதை நீதிமன்றத்தில் பெற்று கொண்டார். இதையடுத்து அந்த வழக்கு முடிக்கப்பட்டு, குற்றவாளிகளான 17 பேரும் கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
நாடு திரும்பும் மகிழச்சியில் இருந்த 17 இந்தியர்களுக்கும் தற்போது அதிர்ச்சி அளித்துள்ளது ஷார்ஜா. அனைவரையும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொலை சம்பவம் நடந்த போது காயமடைந்த 2 பேர் இந்த 17 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனராம். அந்த வழக்கில் இவர்கள் கைதாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 17 இந்தியர்களும், அவர்களது குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications