வெற்றி பெறலாம் என்ற அதிமுகவின் எண்ணம் பலிக்காது- கிருஷ்ணசாமி
சென்னை: தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுவிடலாம் என்ற அதிமுகவின் எண்ணம் நிறைவேறாது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய 4 மாநகராட்சிகளில் புதிய தமிழகம் போட்டியிடுகிறது. இது தவிர 20க்கும் மேற்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் 200 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் 800 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்றங்கள் உள்பட 2,000 பதவிகளுக்கு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலுக்கு மாநில தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு போதிய அவகாசம் கொடுக்கவில்லை.
சட்டசபைத் தேர்தலில் 10 கட்சிகளுக்குத் தலைமை தாங்கிய அதிமுக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தி அதிமுகவுக்கு எதிராக அமையும்.
தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுவிடலாம் என்ற அதிமுகவின் எண்ணம் நிறைவேறாது. தென் மாவட்டங்களில் அதிக இடங்களை புதிய தமிழகம் கைப்பற்றும் என்றார்.












Click it and Unblock the Notifications