மணிப்பூரில் ரூ. 2000க்கு கேஸ், ரூ. 140க்கு பெட்ரோல்-2 மாத சாலை மறியலால் அவலம்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 60 நாட்களாக நடந்து வரும் சாலை மறியல் போராட்டத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. ஒரு கேஸ் சிலிண்டர் ரூ. 2,000-க்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 140-க்கும் விற்கப்படுகிறது.
மணிபூரைச் சேர்ந்த சதார் மாவட்ட கோரிக்கை குழு நாகா மக்கள் ஆதிக்கமுள்ள குகி பழங்குடியினர் அதிகம் வாழும் சதார் மலைப்பகுதியை வருவாய் மாவட்டமாக மாற்றக் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் என்ஹெச்-39 மற்றும் என்ஹெச்-53 ஆகிய 2 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சைகுல், கைபிஃபாங், கெய்தல்மான்பி, சபர்மெய்னா, கங்போக்பி, ஹென்பங் மற்றும் லைகோட் ஆகிய கிராமங்களில் இந்த சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. இரண்டு முக்கிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டுள்ளதால் மணிப்பூரில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. ஒரு கேஸ் சிலிண்டர் ரூ. 2,000-க்கும், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 140-க்கும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ. 40-க்கும், ஒரு கிலோ வெங்காயம் ரூ. 60-க்கும் விற்கப்படுகிறது.
ஒரு புறம் இந்த போராட்டம் நடக்க மறுபுறம் ஐக்கிய நாகா கவுன்சில் சதார் குழுவின் போராட்த்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் இருந்து வடக்கு மணிப்பூரில் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications