அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி
பலசூர்: அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் அக்னி 2 ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
வங்காள விரிகுடாவில் உள்ள வீலர் தீவில் கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அக்னி-2 ஏவுகணையின் முதல் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் 2001, 2004 என அடுத்தடுத்து அக்னி-2 ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டது.
அக்னி-2 ஏவுகணை 20 மீட்டர் நீளம் கொண்டது. 17 டன் எடை கொண்ட அது அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று சுமார் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் வல்லமை உடையது.
ஒரிசா மாநிலம் சண்டிப்பூர் பாதுகாப்புத் தளப் பகுதியிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள வீலர் தீவு ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை இன்று காலை 9.30 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி நடப்பதாக இருந்த சோதனை தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications