துபாயில் இன்று 2-வது உலகத் தமிழர்கள் பொருளாதார மாநாடு!
சென்னை: 2-வது உலகத்தமிழர்கள் பொருளாதார மாநாடு துபாயில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி 4-ந் தேதி வரை நடக்கிறது.
25 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர். மலேசியா முன்னாள் அமைச்சரும், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியா நாட்டு சிறப்பு தூதருமான டத்தோ சாமிவேலு தலைமை தாங்குகிறார். மத்திய அரசின் கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
மத்திய மந்திரி பழனி மாணிக்கம், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், மூத்த வக்கீல் காந்தி, நடிகர்கள் சரத்குமார், எஸ்.வி.சேகர், இயக்குநர்கள் பாரதிராஜா, பி.வாசு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
நிறைவு நாளன்று உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 11 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகிறது.
நிறைவு விழாவுக்கு மத்திய மந்திரி அகமது தலைமை தாங்குகிறார். புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் விருதுகளை வழங்குகிறார். ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
தினமும் மாலையில் நித்யஸ்ரீ மகாதேவன், ஷோபனா ரமேஷ், பத்மினி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் இசை நிகழ்ச்சியும், சொர்ணமால்யாவின் பரதநாட்டியமும் நடக்கிறது.
மேற்கண்ட தகவல்களை உலகத்தமிழர்கள் பொருளாதர கூட்டமைப்பின் சென்னை வளர்ச்சி சங்கத்தின் தலைவரும், மாநாட்டு ஒருங்கிணைப்பாளருமான சம்பத், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், மூத்த வக்கீல் காந்தி, சென்னை வளர்ச்சி சங்கத்தின் செயலாளர் முத்துவேல் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications