லிபியா அரசின் முன்னாள் செய்தி தொடர்பாளர் மூசா இப்ராஹீம் கைது
திரிபோலி: லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் செய்தி தொடர்பாளராக இருந்த மூசா இப்ராஹீம் பெண் போல மாறுவேடத்தில் வந்தபோது, புரட்சிப்படையினரிடம் சிக்கினார்.
லிபியாவில் அதிபர் கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக புரட்சி வெடித்து, கடந்த 6 மாதங்களில், நாடு முழுவதும் புரட்சி படையின் கைவசம் வந்துள்ளது. சில பகுதிகளில் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. தற்போது, புரட்சிப்படையின் இடைக் கால அரசு பதவி ஏற்றுள்ளது.
கடாபியின் குடும்பத்தினர் மற்றும் முக்கிய தலைவர்கள் லிபியாவில் வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ள நிலையில், கடாபி மட்டும் லிபியாவை விட்டு வெளியேறாமல் தலைமறைமாக உள்ளார். கடாபியின் சொந்த ஊரான சிர்த் நகரத்தை புரட்சிப்படையின் கையின் பிடியில் சிக்காமல் பாதுகாப்பதில், கடாபி தனது ராணுவத்துடன் முயன்று வருகிறார்.
இந்நிலையில் சிர்த் நகரின் புறநகரில் கடாபியின் முக்கிய செய்தி தொடர்பாளர் மூசா இப்ராஹீமை நெருங்கிவிட்டதாக புரட்சிப்படைக்கு தகவல் கிடைத்தது. சிர்த் புறநகரில் கடும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, நகரத்தை விட்டு வெளியேறுபவர்களில் சிலர் காரில் வந்தனர். அதில் ஒரு காரில் தப்பி செல்ல முயன்ற மூசா இப்ராஹீம் புரட்சிப் படையினரிடம் சிக்கினார்.
அப்போது அவர் முஸ்லீம் பெண்களை போல பர்தா அணிந்திருந்து மாறுவேடத்தில் இருந்துள்ளார். முகத்திரையை விலக்கி பார்த்த போது, மூசா இப்ராஹீம் மாறுவேடத்தில் இருப்பது தெரிந்து உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த தகவலை அல்-ஹீர்ரா மிஸ்ரதா என்ற டிவி சேனலும், சில அரபு பத்திரிக்கைகளும் உறுதிப்படுத்தி உள்ளன. மூசா இப்ராஹீமின் குடும்பத்தார் பலரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications