நெல்லை தி.மு.க. செயலாளர் கருப்பசாமிபாண்டியன் ஜாமீனில் விடுதலை
நெல்லை: நெல்லை மாவட்ட தி.மு.க.செயலாளர் கருப்பசாமி பாண்டியனுக்கு 3 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததால் விடுதலை செய்யப்பட்டார்.
நெல்லை பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியை சேர்ந்த கொம்பையாபாண்டியன் என்பவரது நிலத்தை அபகரித்ததாகவும், குற்றாலத்தை சேர்ந்த அசோக் பாண்டியன் நிலத்தை எழுதி வாங்கியதாகவும், நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமிபாண்டியன் மீது வழக்கு பதிந்தனர்.
மேலும் தனியார் டி.வி.நிருபரை தாக்கியதாக டவுன் போலீசார் கருப்பசாமி பாண்டியன் மீது வழக்கு பதிந்தனர். இந்த 3 வழக்கு தொடர்பாக கருப்பசாமி பாண்டியன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த 3 வழக்குகளிலும், கருப்பசாமி பாண்டியனுக்கு ஜாமீன் கிடைத்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். பின்பு, பாளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.


Click it and Unblock the Notifications
