விசைத்தறி உரிமையாளர்கள் 6வது நாளாக உண்ணாவிரதம்-ரூ. 1000 கோடி உற்பத்தி இழப்பு
திருப்பூர்: திருப்பூர், கோவை மாவட்டங்களில் நூறு சதவிகித கூலி உயர்வு கோரி ஆறாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விசைத்தறி உரிமையாளர்களின் நிலை கவலைக்கிடமாகியுள்ளது.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் இரண்டு லட்சம் விசைத்தறிகள் இயங்கிவருகின்றன. இந்த விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து நூல் வாங்கி கூலிக்கு நெசவு செய்து தருகின்றனர். இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் கூலி உயர்வு செய்யப்படுகிறது.
அந்த ஒப்பந்தம் காலவதியாகி 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்பொழுது உள்ள விலைவாசிக்கு ஏற்ப அவர்கள் நூறு சதவிகித கூலி உயர்வு கேட்டு வருகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் 25 சதவிகித கூலி உயர்வு மட்டுமே தரமுடியும் என்று தெரிவித்துள்ளனர்.
கூலி உயர்வு கோரி ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூலி உயர்வுக்காக ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும் அவை தோல்வியில் முடிந்ததால் பல்லடம், சோமனூர், சூலூர் உள்ளிட்ட ஆறு ஊர்களில் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
ஆறாவது நாளாக உண்ணாவிரதம்
ஆறு நாட்களாக ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பலரது நிலை கவலைக்கிடமாகியுள்ளது. பலர் மயக்கமடைந்து வருகின்றனர். அவர்களுக்கு உண்ணாவிரதப் பந்தலிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தங்களின் நிலை அறிந்து அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரம் கோடி இழப்பு
திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஒரு மாதங்களுக்கு மேலாக விசைத்தறிகள் இயங்காத காரணத்தினால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பியுள்ள 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மாற்றுவழி தெரியாத்தால் தொழிலாளர்கள் பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications