டீத் தூளில் கலப்படத்தை ஒழிக்க முடியாது: தென்னிந்திய தேயிலை வாரியம்
கோவை: சில்லரை வணிகத்தில் தேயிலைத் தூளில் கலப்படத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது. கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமத்தை மட்டுமே ரத்து செய்ய முடியும் என தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன் பேசினார்.
கோவை வெள்ளக்கிணறு தேயிலை வர்த்தக சங்க 29வது பொதுக்குழு கூட்டம், தலைவர் ஆனந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன் கலந்து கொண்டு பேசியதாவது, தென்னிந்திய தேயிலைத் தூள் பாகிஸ்தான், ஈராக், ஈரான், எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இவ்வாறு ஏற்றுமதியாகும் தேயிலைத் தூளை கேரளாவில் மதிப்பு கூட்டு வரி இல்லை என்பதால் கேரளாவில் உள்ள கொச்சியில் இருந்து அனுப்புகின்றனர். தமிழகத்தில் ஏற்றுமதிக்கான மதிப்புக் கூட்டு வரி (வாட்) நடைமுறையில் உள்ளதால், வர்த்தகர்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சில்லரை வணிகத்தில் தேயிலைத் தூளில் கலப்படத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது. கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமத்தை மட்டுமே ரத்து செய்ய முடியும். நுகர்வோர்கள் தான் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 1998ம் ஆண்டு பதியப்பட்ட எஸ்டேட்டுகளில் தற்போது 9 விழுக்காடு நிலப்பரப்பு குறைந்து காணப்படுகிறது. தேயிலை எஸ்டேட்டாக பயன்படுத்தப்பட்ட நிலத்தை சிலர் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு வர்த்தக நோக்கத்துடன் பயன்படுத்தும் அந்த நிலங்களை தேயிலை வாரியம் திரும்ப எடுத்துக் கொள்ளும். இந்தியாவில் 6 தேயிலை கொள்முதல் மையங்கள் உள்ளன. தென்னிந்தியாவில் கொச்சி, கோவை, குன்னூரில் உள்ளன. இதில் இந்திய அளவில் கோவை 5வது இடத்தில் உள்ளது, என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications