மாஜி அமைச்சர் கே.என். நேருவுக்கு முன்ஜாமீன்- மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கியது
Subscribe to Oneindia Tamil

நேரு மீது இட ஆக்கிரமிப்பு உள்ளிட்ட 8 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் ஜாமீன் கோரி நேரு சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்யப்பட்டது.
தற்போது கோர்ட்டுக்கு தசரா விடுமுறை என்பதால் விடுமுறை கால கோர்ட்டில் நீதிபதி கர்ணன் முன்னிலையில் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மனுவை விசாரித்த நீதிபதி, கே.என்.நேரு முன்னாள் அமைச்சராக இருந்தவர், தற்போது நடக்க இருக்கும் திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக உள்ளார்.
எனவே ஜனநாயகப்படி அவரை விடுவிப்பது உகந்தது என்று கூறி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அவருடன் மேலும் 11 பேருக்கும் ஜாமீன் அளித்தார் நீதிபதி. அனைவரும் திருச்சி நீதித்துறை நடுவர் மன்றம் ஒன்றில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications