திருப்பூரில் வைரஸ் காய்ச்சலில் 5 வயது சிறுவன் பலி
திருப்பூர்: திருப்பூர், அனுப்பர்பாளையத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான்.
கோவை அனுப்பர்பாளையம் வீரமாத்தி வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி, பாத்திர வியாபாரி. இவரது மகன் சித்ருப் (5). இந்த சிறுவன் அருகில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 4 நாட்களுக்கு முன் சித்ருப்பிற்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. பெற்றோரால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சித்ருப்பின் நிலை மோசமடைந்தது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு ரத்த மாதிரியை எடுத்த போது, சிறுவனை வைரஸ் காய்ச்சல் தாக்கி இருப்பது தெரிந்தது.
இந்நிலையில், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் சித்ருப், சிகிச்சை பலனின்றி இறந்தான். இந்த தகவல் மாவட்டம் முழுக்க பரவ பொது மக்கள் வைரஸ் காய்ச்சல் பீதியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications