சத்பாவனா உண்ணாவிரதம்- ஊடகங்கள் பார்க்கத் தவறியவை!

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மேற்கொண்ட 3 நாள் உண்ணாவிரதத்தின் உண்மையான நோக்கத்தை பார்க்க ஊடகங்கள் தவறிவிட்டன. மத்திய அரசு பல நெருக்கடிக்குள்ளாகி சிக்கித் தவித்த சமயத்தில், மத்தி்யில் 2 மூத்த அமைச்சர்களுக்கிடையே மோதல் ஏற்பட்ட நேரத்தில் எதி்கட்சியினர் ஒற்றுமையாக இருந்து நடத்திய இந்த உண்ணாவிரதம் வரவேற்க வேண்டியதாகும்.
அதை விட்டுவிட்டு ஊடகங்கள் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் தயாராவதாகத் தான் கூறின. பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு அறுவை சிகிச்சை நடந்ததாலும், சிவ்ராஜ்சிங் சௌஹான் சீனா சென்றிருந்ததாலும் அவர்கள் இருவரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த உண்மை தெரியாமல் ஊடகங்கள் கட்காரி எங்கே, சௌஹான் எங்கே என்று அதைப் பெரிய விஷயமாக்கிவிட்டன.
உண்மையை விட்டுவிட்டு சில்லறைத்தனமான போலியான விஷயங்களை மட்டும் ஊடகங்கள் கண்டது ஏன் என்று ஆங்கில ஊடகங்களின் ஆசிரியர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். சத்பாவனா உண்ணாவிரதம் போன்று ஏதாவது ஒரு உண்ணாவிரதத்தில் ஒற்றுமையைப் பார்த்துள்ளார்களா? இல்லை அதுபோன்ற உண்ணாவிரதங்கள் குறித்து பேச எந்த ஊடகத்திற்காவது துணிச்சல் இருந்ததா?
சமுதாய நல்லிணக்கத்திற்காகத் தான் நடந்தது, இல்லை 2012-ம் ஆண்டில் எதிர்கட்சித் தலைவர் யார் என்று போட்டி நிலவுகிறது என்று சட்டென்று ஒரு முடிவுக்கு வர இது ஒன்றும் ராக்கெட் அறிவியல் இல்லை.
இது இங்கேயே முடிவதில்லை. மல்லிகா சாராபாய் மற்றும் தீஸ்தா செட்லவாத் போன்றோரிடம் கேட்க வேண்டும், உங்களது உண்மையான கடமையின் நோக்கம் என்ன என்று.
அவருடைய குடும்பத்தினரால் கடந்த காலத்தில் வேலையிழந்த ஆலைத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு போதிய இழப்பீடு தராததால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக, அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 200 ஏழைக் குழந்தைகளுக்கு அவரால் உணவு தர முடியுமா என்று கேட்க வேண்டும்.
அவர் நீதித்துறை மீது வைத்துள்ள அவநம்பிக்கை, மதவாத வன்முறை சட்டம் தொடர்பாக அவர் எடுத்துள்ள நிலைப்பாடு, 60 ஆண்டுகளுக்கு முன்பு அட்டர்னி ஜெனரலாக இருந்த அவரது பிரபல தாத்தாவின் நிலைப்பாட்டுக்கு முரண்பாடானதாக இருப்பது குறித்து கேட்க வேண்டும்.
சத்பாவனா உண்ணாவிரதம் பற்றி விளக்கம் அளிப்பதற்காக இந்த கட்டுரை எழுதப்படவில்லை. அதை அவ்வளவு எளிதாக ஒரு கட்டுரையில் கூறிவிட முடியாது. தனக்கென ஒரு இமேஜை உருவாக்க விரும்பாத ஒருவருக்கு இமேஜ் கிடைக்க இந்த கட்டுரை மூலம் முயற்சிக்கவில்லை. மதச்சார்பின்மை அல்லது வகுப்புவாதம் பற்றி பேச முயற்சிக்கவில்லை. கடந்த 2 வாரங்களாக நடந்த நிகழ்ச்சிகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. அதை தெளிவுபடுத்தத் தான் இந்த கட்டுரை. குஜராத் மக்களிடையே சமாதான உணர்வு மற்றும் நல்லிணக்கத்தை அதிகரிக்கவே சத்பாவனா உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. உண்ணாவிரதம் நடந்த இடத்தில் கூடிய மக்களைப் பார்த்தபோது அவர்களின் அமோக ஆதரவைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
இந்த உண்ணாவிரதம் ஒரு நாடகம் என்றவர்கள் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். அது நாடகம் என்றால் ஏராளமான முஸ்லிம்கள் எதற்காக உண்ணாவிரதம் நடந்த இடத்திற்கு வந்தனர்? ஒருவர் தலையில் தொப்பி அணிவதால் அவர் மதச்சார்பற்றவர் என்று கூறிவிட முடியாது. சத்பாவனா உண்ணாவிரதம் அமைதி, நல்லிக்கணத்தை ஊக்குவித்ததோடு மட்டுமில்லாமல் முக்கிய எதிர்கட்சியின் ஒற்றுமையை அதிகரிக்க ஒரு வழிவகுத்தது என்பதை கவனிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications