'உறைய' வைத்த கண்டுபிடிப்பு- மூவருக்குக் கிடைத்த நோபல்!

இந்த மூன்று அமெரிக்க வி்ஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் இந்த மூவருக்குமே கூட தங்களது கண்டுபிடிப்பு பெரும் வியப்பையே அளித்ததாம். அவர்களால் கூட இதை நம்ப முடியவில்லையாம்.
சூப்பர் நோவா எனப்படும் நட்சத்திர வெடிப்பை தொடர்ச்சியாக ஆராய்ந்து அதன் அடிப்படையில்தான் உலகம் கடைசியில் உறைந்து போய் விடும் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லியுள்ளனர் இந்த மூவரும்.
14 பில்லியின் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிக் பாங் (Big Bang) எனப்படும் மிகப் பெரிய அண்டவெடிப்பு அனைவருக்கும் தெரிந்ததுதான். பிக் பாங்குக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய வெப்பம் படிப்படியாக குளிர்ந்து நட்சத்திரக் கூட்டம், கிரகங்கள் உள்ளிட்டவை உருவாகின. பிரபஞ்சமும் தொடர்ந்து விரிவடைந்து வந்தது. அந்த செயல் இன்றும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த வேகம் அதிகரித்தால் இறுதியில் உலகம் முழுவதும் பனிப் பிரதேசமாகி உறைந்து போய் விடும் என்பதுதான் இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.
இந்த மூவருமே தனித் தனி அணியாக செயல்பட்டு ஆய்வில் ஈடுபட்டிருந்தவர்கள். ஒரு குழுவுக்கு சால் பெர்ல்மட்டர் தலைமை தாங்கினார். இன்னொரு குழுவுக்கு பிரையன் ஸ்மிட் தலைவராக இருந்தார். பெர்ல்மட்டர் தலைமையிலான குழு தனது ஆய்வை 1998ல் தொடங்கியது. பிரையன் தலைமையிலான குழு தனது ஆய்வை 1994ல் தொடங்கியது. இந்தக் குழுவில் முக்கியப் பங்காற்றியவர் ஆடம் ரீஸ்.
பூமி மற்றும் விண்வெளியிலிருந்து அதி நவீன தொலை நோக்கிகள் மூலம் இந்த ஆய்வு நடந்தது. இதற்காக அதிக சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்களும் பயன்படுத்தப்பட்டன. இவர்களது ஆய்வுக்குப் பெரும் வரப்பிரசாதமாக வந்தது டிஜிட்டல் இமேஜிங் சென்சார் கருவி. இதைக் கண்டுபிடித்தவருக்கு 2009ம் ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
12க்கும் மேற்பட்ட நட்சத்திர வெடிப்புகளை இவர்கள் ஆய்வு செய்தபோதும் 'டைப் லா சூப்பர்நோவா' என்ற ஒரு நட்சத்திர வெடிப்பை மட்டும் குறிப்பாக தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த ஒரு நட்சத்திர வெடிப்பில் மட்டும் ஒரு முழுமையான கேலக்ஸி வெளிப்படுத்தும் வெளிச்சத்தை விட பல மடங்கு அதிக வெளிச்சம் உருவாவதை வி்ஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்தது.
இதேபோல மொத்தம் 50 நட்சத்திர வெடிப்புகளை இவர்கள் கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர். ஒரு நட்சத்திர வெடிப்புக்கே இந்த அளவு வெளிச்சம் வரும்போது 50 நட்சத்திர வெடிப்புகள் மூலம் எவ்வளவு வெளிச்சம் தர வேண்டும்?. ஆனால் அப்படி தரவில்லை. வி்ஞ்ஞானிகள் குழு எதிர்பார்த்த அளவிலான வெளிச்சத்தை அவர்களால் காண முடியவில்லை. இதன் மூலம் பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருவதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
பிரபஞ்சத்தின் 5 சதவீத பகுதியில்தான் கிரகங்கள், நட்சத்திரங்கள், பூமி உள்ளிட்டவை உள்ளன. மீதமுள்ள 95 சதவீத பகுதி டார்க் எனர்ஜி எனப்படும் அறியப்படாத சக்தி அடங்கியவை. எனவே தற்போது இந்த மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துக் கூறியுள்ள தகவல்கள், பிரபஞ்சம் குறித்த ஆய்வுகளுக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது. மேலும் நம் முன் விரிந்து கிடக்கும், நம்மால் இன்னும் அறியப்படாத பல புதிர்களுக்கு விடை காண இந்த ஆய்வுகள் முதல் படியாக அமையும் எனக் கருதப்படுகிறது.
அறிவியலில் எதுவும் சாத்தியமே என்பதை இந்த மூவர் குழு மீண்டும் நிரூபித்துள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications