சுங்கான்கடை காட்டுத்தீயில் சிக்கி என்ஜீனியரிங் மாணவர் பலி

Subscribe to Oneindia Tamil

திங்கள்சந்தை: சுங்கான்கடை மலையை சுற்றி பார்க்க சென்ற என்ஜினியரிங் மாணவர் அங்கு எரிந்து கொண்டிருந்த காட்டு தீயில் சிக்கினார். இதில் அவர் உடல் கருகி இறந்தார்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் லியோன். இவரது மகன் ஆண்டனி சகாய மிக்கேல். இவர் நாகர்கோவில் அருகே ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் பிஇ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் சக மாணவர்களான இன்பேன்ட் அந்தோணி அதிபன்ராஜ், லெனின் கிங்ஸ், இசக்கிமுத்து, ராஜேஸ் பிரகாஷ், விஷால் ஆகியோரும் சுங்கான்கடை மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

மலை பகுதியில் இவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஏற்கனவே இந்த காட்டில் நேற்று முன்தினம் மதியத்தில் இருந்து தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. காற்று வேகமாக வீசியதால் தீ வேகமாக பரவிய வண்ணம் இருந்தது. இவர்கள் 6 பேரும் இதை கவனிக்காமல் காட்டில் இருந்துள்ளனர்.

சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி இவர்கள் அமர்ந்திருந்த பகுதியை சுறறி வளைத்தது. இதில் ஆண்டனி சகாய மைக்கேல் தப்பி செல்ல வழியில்லாமல் காட்டு தீயின் நடுவில் சிக்கினார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற நண்பர்களும் காயமடைந்தனர். இதில் இன்பெண்ட் அந்தோணி அதிபன்ராஜூக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், ஆர்டிஓ மோகனசந்திரன் மற்றும் போலீசார் மலையில் சிக்கியிருந்த மற்ற மாணவர்களை பத்திரமாக மீட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+