ஆம்புலன்ஸ் மூலம் மது பாட்டில்களை கொண்டு போகிறார்கள்-டாக்டர் ராமதாஸ்
வேலூர்: உள்ளாட்சித் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பேமதுக் கடைகளை மூட வேண்டும். தற்போது ஆம்புலன்ஸ்கள் மது பாட்டில்களை கடத்திச் செல்கிறார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
உள்ளாட்சித் தேர்தலுக்கு 10 நாள் முன்பேடாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தற்போது வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக ஆம்புலன்ஸ்கள் மூலம் மது பாட்டில்களை எடுத்துச் செல்கிறார்கள்.தேர்தல் ஆணையம் நியாயமாகநடக்க வேண்டும்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து 1998ம் ஆண்டு முதலே நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். அந்த ஊர் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை பாமக ஆதரிக்கிறது. இந்த அணு உலையை மூடுவது குறித்து முதல்வர் ஜெயலலிதா கருத்து தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்பதை அவர் விளக்க வேண்டும்.
தெலுங்கானா விவகாரத்திற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். தெலுங்கானா போராட்டத்தால் தமிழகமும் பாதிக்கப்பட்டு வருகிறது.
13 சட்டசபைத்தொகுதிகளைக் கொண்ட வேலூர் மாவட்டத்தை நிர்வாக வசதி கருதி இரண்டாக பிரிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாவட்டம் முழுமையாக முன்னேற முடியும்.
வாக்குக்கு பணம் கொடுக்காத வேட்பாளர்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும். இனி எந்தக் காலத்திலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை. அரசியலில் மாற்றம் கெண்டுவரவே தனித்து போட்டியிடுகிறோம். பாமக தனித்து போட்டியிடப்போகிறது என்று முடிவு செய்த பின்னரே, மற்ற அனைத்துக் கட்சிகளும் தனியாக போட்டியிட போவதாக முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தனியாக போட்டியிடும் முடிவை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே எடுத்திருந்தால், 40, 50 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருப்போம் என்றார் அவர்.
இனி எக்காலத்திலும் திமுக, அதிமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என்று பாமக முடிவெடுத்து இன்த உள்ளாட்சித் தேர்தலி்ல தனியாக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications